சிறப்பாக இடம்பெற்றது கிளிநொச்சி பண்பாட்டு விழா!

கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு விழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை இராஜாங்க அமைச்சின் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக திறண் விருத்தி மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது, பாரம்பரிய பண்பாட்டை எடுத்தியம்பும் வகையில் ஆரம்பமான பண்பாட்டு பேரணி பிள்ளையார் ஆலயம் முன்பாக ஆரம்பமாகி,  விழா மண்டபம் வரை முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து மங்கள விளக்கேற்றலுடன் குறித்த விழா ஆரம்பமாகியதுடன்,  பண்பாட்டு விழுமியங்களை எடுத்தியம்பும் கலை நிகழ்வுகளும் அரங்கை அலங்கரித்தன.

அத்துடன்,  இளம் கலைஞர்கள் கலைத்துறை சாதனையாளர்கள் உள்ளிட்டோருக்கான விருதுகளும் பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் இளங்கோவன்,  வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர்,  பிரதேச செயலாளர்கள்,  துறை சார் அதிகாரிகள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *