
இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் எம். அஷ்ரப் ஹைதரிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் சார்பில் இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அத்துடன், இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து ஆராயப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
Leave a Reply