
தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் மாகாண ஆளுநர்களின் பொறுப்புகள் தொடர்பான வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் திங்கட்கிழமை இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றது முதல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பல்வேறு அதிரடியான திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றார்.
அரச அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் அகற்றப்பட்டு, இலங்கையின் தேசிய இலட்சனை காட்சிப்படுத்தப்பட்டது.
ஜனாதிபதியின் பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையும் அதிரடியாக குறைக்கப்பட்டது. அதேபோன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
எனினும், இதுவரையில் வடக்கு மாகாணத்திற்கான ஆளுநர் நியமிக்கப்படவில்லை. ஆளுநர் நியமனத்திற்காக பலரது பெயர்களும் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் எதிர்வரும் சில தினங்களில் வடக்கிற்கான புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Leave a Reply