தனியாக நடந்து சென்ற நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்…

தாய்லாந்தில் நபர் மறு சுழற்சி செய்யக் கூடிய கழிவுகளை தேடும் போது, திமிங்கலத்தின் வாந்தி என்று கூறப்படும் மெழுகு போன்ற பொருளை எடுத்துள்ளதால், அவர் கோடீஸ்வரராக மாறவுள்ளார்.

தாய்லாந்தின் தெற்கில் Songkhla பகுதியில் இருக்கும் மணல் பரப்பில் Surachet Chanchu என்ற நபர் கடந்த புதன் கிழமை தனியாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவர் அங்கு மறு சுழற்சி செய்யக் கூடிய கழிவுகளை தேடும் போது, சாம்பல் நிறத்தில் இருக்கும் ஒரு பொருளை கண்டுள்ளார். அதன் பின் அது திமிங்கலத்தின் வாந்தியாக இருக்கலாம் என்று நம்பி அதை அவர் வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார்.

அதன் பின் இது குறித்து தன்னுடைய நண்பர்கள் சிலருக்கு தெரிவிக்க, அவர்கள் Surachet Chanchu-வின் வீட்டிற்கு வந்து அதை பார்த்துள்ளனர். கொஞ்சம் மெழுகு போன்று இருந்ததால், இ-சிகரெட் மூலம் சோதனை செய்துள்ளனர்.

அப்போது அது உருகி, ஒரு இனிமையான வாசனையை கொடுக்க, அவர்கள் இது திமிங்கலத்தின் வாந்தி தான், பல லட்ச கணக்கில் போகும் என்று கூறியுள்ளனர்.

Surachet Chanchu எடுத்திருக்கும் அதன் எடை சுமார் 16.7 கிலோ எனவும், திமிங்கலத்தின் வாந்தியை Ambergris என்றும் கூறுவார். இதன் முந்தைய விலையின் அடிப்படையில் பார்த்தால், ஒரு கிலோவிற்கு 14,500 பவுண்ட் வீதம் மொத்தம் 536,500(இலங்கை மதிப்பில் 11,83,59,831 கோடி ரூபாய்) பவுண்ட் வரை போகும் என்று கூறப்படுகிறது.

இதற்காக Surachet Chanchu அரசாங்க அதிகாரிகளை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் அங்கிருக்கும் கழிவுகளை எடுத்து கொண்டிருந்த போது, இதைக் கண்டேன், இது பார்ப்பதற்கு திமிங்கலத்தின் வாந்தி என்று நினைத்தேன், இதனால் நான் அதை உடனடியாக கொண்டு வந்து சோதித்து பார்த்தேன் என்று கூறியுள்ளார்.

நடுக்கடலில் உள்ள திமிங்கலங்கள் அரிதான மீன்களை சாப்பிட்ட பிறகு சில மீன்கள் சரியாக செமிக்காமல் திமிங்கலத்தின் குடல் பகுதிலேயே தங்கி விடும்.

வெளியே செல்லாது, இதானால் அது ஒரு பெரிய பந்து போல் உருவாகும். இந்த எச்சத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு திமிங்கலம் வாந்தியாக வெளியே தள்ளும்.

மெழுகு பந்துப் போல் இருக்கும். இந்த பொருளை விஞ்ஞானிகள் Ambergris என அழைக்கின்றனர். வாசனை திரவியங்கள் தயாரிக்க இந்த பொருள் மிகவும் முக்கியமானதாக தேவைப்படுவதால், இதன் விலையும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயர்ந்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *