தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள வவுனியா பிரதேச சபையின் பாதீடு தோற்கடிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசம் உள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2020 ஆம் ஆண்டிற்கான பாதீடு பெரும்பான்மை வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

வவுனியா வடக்கு பிரதே சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் இ.தணிகாசலம் தலைமயில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது, சுதந்திரக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முண்ணணி, தமிழர் விடுதலை கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுன, சுயேட்சை குழு ஆகியவற்றைச் சேர்ந்த 25 உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகி இருந்தனர். மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஒருவர் சமூகமளித்திருக்கவில்லை.

இந்த அமர்வில் வரவு செலவுத்திட்ட விவாதம் இடம்பெற்று வாதப் பிரதிவாதங்கள் கடுமையாக இடம்பெற்றன.

கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான சபையின் வரவு செலவுத் திட்டத்தில் தவிசாளர் தனது பகுதிக்கே முக்கியத்துவம் வழங்கியதுடன் இம்முறை வரவு செலவுத் திட்டத்திலும் மக்கள் சார்பான வேலைத் திட்டத்திற்கு போதியளவு நிதி ஒதுக்கப்படவில்லை என பல்வேறு உறுப்பினர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அனேக உறுப்பினர்களின் எதிர்ப்பினால் வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. இதன்பொது வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக தமிழர் விடுதலைக் கூட்டணி, பொதுஜன பெரமுன, ஜக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சுயேட்சைக் குழு ஆகியவற்றைச் சேர்ந்த 17 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

பாதீட்டுக்கு ஆதரவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 7பேர் வாக்களித்ததுடன், கூட்டமைப்பிவுள்ள ரெலோவை சேர்ந்த சபையின் உபதவிசாளர் யோகராசா நடுநிலை வகித்திருந்தார். இதனால் சபையின் பாதீடு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தது.

இது தொடர்பாக சபையின் தவிசாளர் இ.தணிகாசலத்திடம் கேட்டபோது, “எமது சபையின் வருமானத்திற்கு ஏற்பவே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2019ஆம் ஆண்டிற்கான சில அபிவிருத்தித் திட்டங்கள் எமது நாடாளுமன்ற உறுப்பினர்களூடாக வழங்கப்பட்ட கம்பரெலிய நிதி ஊடகாவே செய்யப்பட்டது.

எனவே இவர்களது குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது. அது அரசியல் காழ்ப்புணர்சி கொண்டது. எம்மை குற்றம் சாட்டி அரசியல் இலாபம் தேட அவர்கள் முனைகின்றார்கள். நாம் எமது மக்கள் சார்பாகவே செயற்படுகிறோம்” என்று தெரிவித்தார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *