
திருகோணமலையில் தாயாரால் உயிருடன் புதைக்கப்பட்டதாக கூறப்படும் சிசுவின் சடலமொன்று, புதைக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு பின்னர் இன்று தோண்டி எடுக்கப்பட்டது.
திருகோணமலை – உப்புவெளி – விளாங்குளம் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 9ஆம் திகதி குறைமாதத்தில் பிறந்த குறித்த சிசுவை, அதன் தாய் புதைத்துள்ளதாக கிராம உத்தியோகத்தரின் ஊடாக காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம். எச். எம். ஹம்சா தலைமையில், திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி மற்றும் காவற்துறையினரின் முன்னிலையில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
குறித்த சிசுவின் தாயார் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply