
பிரித்தானியா பொதுத் தேர்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத அளவிற்கு 2019 தேர்தலில் அதிக பெண்கள் வெற்றிப்பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பிரித்தானியாவில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளில் இன்னும் ஓரிரு இடங்கள் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், சபைக்கு அதிக பெண் எம்.பி.க்கள் தெரிவு செய்யப்பட்டிருந்து முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரித்தானியா பொதுத் தேர்தலில் அதிகபட்சமாக 208 பெண்கள் தெரிவு செய்யப்பட்தே சாதனையாக இருந்து வரும் நிலையில், 2019 பொதுத்தேர்தலில் அச்சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பிரித்தானியா வரலாற்றில் இல்லாத அளவிற்கு புதிய சபையில் பெண் எம்.பி.க்கள் அதிகம் இருப்பார்கள் என்பது தெளிவாகியுள்ளது.
புதிய சபையில் தொழிலாளர் கட்சியே அதிக பெண் எம்.பி.க்களை கொண்டிருக்கும். சுமார் 104 பெண்கள் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளனர். கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட 86 பெண்கள் வென்றுள்ளனர். இது புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக பலர் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply