
பிரித்தானிய தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அமெரிக்க ஜனாதிபதி தனது வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், மாபெரும் வெற்றி பெற்றுள்ள போரிஸ் ஜான்சனுக்கு வாழ்த்துக்கள்.
பிரித்தானியாவும் அமெரிக்காவும் பிரெக்சிட்டுக்குப் பின், புதிய, பெரிய ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளும் சுதந்திர சூழல் உருவாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்யப்படும் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் விட பெரிய மற்றும் லாபகரமான ஒப்பந்தமாக அது அமையப்போகிறது.
கொண்டாடுங்கள் போரிஸ், என்று வாழ்த்தியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
Leave a Reply