
பிரித்தானிய பொதுத்தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற போரிஸ் ஜான்சன், லண்டனில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றினார்.
அப்போது, பல தடைகளை தாண்டி நாம் சாதித்துவிட்டோம் என்று கூறிய போரிஸ் ஜான்சன், 1980க்கு பிறகு கன்சர்வேட்டிவ் கட்சியினருக்கு பெரும்பான்மை பெற்றுத்தர பாடுபட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
இந்த பெரும்பான்மை வெற்றியால் நாம் இப்போது பிரெக்சிட்டை நிறைவேற்றப்போகிறோம்.
சந்தேகங்களுக்கும், நிலையற்ற தன்மைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, ஜனவரி மாதம் 31ஆம் திகதி பிரெக்சிட்டை நிறைவேற்றுவோம்.
ஒரே பிரித்தானியாவாக ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறி, நமது சட்டங்கள், நமது எல்லைகள், பணம், வர்த்தகம், புலம்பெயர்தல் அமைப்பு என அனைத்தையும் இனி நாமே கட்டுப்படுத்துவோம்.
நமது மருத்துவத்துறைக்காக கன்சர்வேட்டிவ் அரசு பெரிய அளவில் முதலீட்டை அதிகரிக்கும்.
NHS கன்சர்வேட்டிவ் அரசின் முன்னுரிமையாகும், எனவே மேலும் 50,000 நர்ஸ்களையும் மேலும் 50 மில்லியன் அறுவை சிகிச்சைக்கான அப்பாயிண்ட்மெண்ட்களையும் 40 புதிய மருத்துவமனைகளையும் ஏற்படுத்துவோம்.

பள்ளிகளுக்கு இதுவரை இல்லாத அளவில் செலவு, அவுஸ்திரேலிய ஸ்டைலில் புள்ளிகள் அடிப்படையிலான புலம்பெயர்தல் அமைப்பு, மற்றும் 20,000 அதிக பொலிசாரையும் ஏற்படுத்துவோம் என்ற ஜான்சன் மேலும் சில அறிவிப்புகளுடன் தனது உரையை நிறைவு செய்தார்.
பிரெக்சிட்டை நிறைவேற்றுவோம் என்று கூறிய ஜான்சன் தனது உரையின் முடிவில் அனைவருக்கும் நன்றி என்று கூறியதோடு, முதலில் காலை உணவை சாப்பிடுவோம் என்று வேடிக்கையாக கூறி விடைபெற்றார்.
Leave a Reply