
பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் முடிவடையும் நிலையில் மேலும் ஒரு மாதம் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு 2-வது முறையாக பரோல் வழங்கப்பட்டது.
தந்தைக்கு உடல் நலம் சரியில்லாததாலும், அவரது சகோதரியின் மகள் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவும், அவரது தாய் அற்புதம்மாள், பரோல் வழங்குமாறு தமிழக அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையேற்று பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து சகோதரியின் மகள் திருமணத்தில் பேரறிவாளன் கலந்துகொண்டார்.
பேரறிவாளனின் பரோல் காலம் இன்றுடன்(வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது.
இந்நிலையில் அவரது தந்தையின் உடல்நலம் மோசமாக இருப்பதால் மேலும் ஒருமாதம் பரோலை நீடிப்பு செய்ய வேண்டும் என தாயார் அற்புதம்மாள் தமிழக அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு ஒருமாதம் பரோல் காலத்தை நீடிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.
Leave a Reply