
யாழில் பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவர் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
யாழ். பருத்தித்துறை பகுதியில் நேற்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின்போது, அப்பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஜசன் ஆனந்த் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுவன் கிணற்றில் தவறி வீழ்ந்து சில மணி நேரத்தின் பின்பு அவரை கிணற்றிலிருந்து மீட்டு உறவினர்கள் மந்திகை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Leave a Reply