
உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின் வெற்றிடத்திற்கு வருண பிரியந்த லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் பட்டியலில் ரஞ்சித் டீ சொய்சாவுக்கு அடுத்ததாக அதிக விருப்பு வாக்குகளை பெற்றுள்ள வருண பிரியந்த லியனகேவை குறித்த வெற்றிடத்தில் பெயரிடுவதற்கு தீர்மானத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டீ சொய்சா உடல்நலக்குறைவினால் சிங்கப்பூர் வைத்தியசாலை ஒன்றில் கடந்த 4ஆம் திகதி உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply