
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கருவேப்பங்கேணி பகுதியில் தேங்கியுள்ள வெள்ள நீரினை வெளியேற்றும் பணிகளை மாநகர சபை முன்னெடுத்து வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு வார காலத்திற்கு மேலாக பெய்த அடை மழை காரணமாக மாநகர சபைக்குட்பட்ட கருவேப்பங்கேணி பிரதேசத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரினை வெளியேற்றும் நடவடிக்கைகள் நேற்று(வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
கருவேப்பங்கேணி, ஜெயந்திபுரம் போன்ற பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளமை காரணமாக அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலர் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர்.
அத்துடன் டெங்கு போன்ற நோய் தொற்றுகளுக்கும் உள்ளாகும் நிலையும் உருவாகியுள்ளது.
இதன்காரணமாக மாநகர சபையின் 6ஆம் வட்டார உறுப்பினர் வேலுப்பிள்ளை தவராஜாவும் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவனுக்கு விடுத்த வேண்டுகோளிற்கு இணங்க மேற்படி பணியானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Leave a Reply