‘அதிமுக்கிய சோதனை’ நடத்தி கிம் ஜாங் உன் அதிரடி

வட கொரியா அதன் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் மற்றொரு மிக முக்கியமான சோதனை நடத்தியதாக அந்நாட்டு அரசு ஊகமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது

சோஹே செயற்கைக்கோள் ஏவுதளத்தில் நடத்தப்பட்ட இச்சோதனை, அதன் அணுசக்தித் தடுப்பை உத்திகளை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரியாவின் பாதுகாப்பு அறிவியல் அகாடமியின் செய்தித் தொடர்பாளரை மேற்கோள் காட்டி இத்தகவலை வெளியிட்டுள்ள கே.சி.என்.ஏ, எந்த வகையான சோதனை நடந்தது என்பதைக் குறிப்பிடவில்லை.

கடந்த வாரத்தில் மட்டும் சோஹே செயற்கைக்கோள் ஏவுதளத்தில் நடத்தப்பட்ட இரண்டாவது சோதனை இதுவாகும்.

வட கொரியா மூடுவதாக உறுதியளித்ததாக அமெரிக்க அதிகாரிகள் ஒருமுறை கூறிய ராக்கெட் சோதனை வசதியான சோஹே செயற்கைக்கோள் ஏவுதளத்தில், டிசம்பர் 7ம் திகதி வட கொரியா ஒரு ‘மிக முக்கியமான’ சோதனையை நடத்தியதாக கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வை ‘பெரும் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிகரமான சோதனை’ என்று கே.சி.என்.ஏ அறிக்கை குறிப்பிட்டுள்ளது. தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜியோங் கியோங்-டூ இது ஒரு இன்ஜின் சோதனை என்று கூறினார்.

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளுக்கு இடையே ஒரு ‘புதிய பாதையை’ எடுக்க முடியும் என்று வட கொரியா எச்சரித்துள்ளது.

தென் கொரிய அதிகாரிகளுடனான சந்திப்புகளுக்காக வட கொரியாவிற்கான உயர்மட்ட அமெரிக்க தூதர் ஞாயிற்றுக்கிழமை சியோலுக்கு வருகிறார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் மீண்டும் வரக்கூடும் என்ற அச்சத்தைத் தூண்டி, வட கொரியா ஆயுத சோதனைகளை நடத்தியதோடு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் வார்த்தைப் போரை நடத்தியதால் சமீபத்திய வாரங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *