
இலங்கையில் நடந்த படுகொலைகள், மற்றும் ஆட்கடத்தல்கள் குறித்து விசாரணை நடத்திய குற்றப்புலனாய்வு பிாிவின் விசாரணை அறிக்கைகளை ஐ.நா மனித உாிமை ஆணைக்குழுவுக்கு நிஷாந்த சில்வா அனுப்பியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த இரகசிய அறிக்கைகளை மனித உரிமை ஆணைக்குழுவில் தான் கண்டதாக முன்னாள் மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் செய்த் ராத் ஹுசைன் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டமை தொடர்பான இரகசிய ஆவணம் முதலில் ஜெனீவாவிற்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இரகசிய பொலிஸ் விசாரணைகள் தொடர்பான 100 இரகசிய ஆவணங்கள் ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழு மற்றும் ஐக்கிய நாடுகளின் முன்னாள் அதிகாரி யஸ்மின் சூகாவிற்கு கிடைத்துள்ளதாகவும் குறித்த தென்னிலங்கை ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
Leave a Reply