
ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் பெயரை உபயோகித்து மோசடிகளும் பொது மக்களுக்கு அச்சுறுத்தலும் இடம்பெறுகின்றதாகவும் அவை தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள சிறப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் பெயரை உபயோகித்தும் ஜனாதிபதி செயலகத்தில் பதவி வகிப்பதாக குறிப்பிட்டும் சில நபர்களால் பொதுமக்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுதல், அச்சுறுத்தப்படுதல் மற்றும் தொழில்வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் குறிப்பிடுதல் போன்ற பல்வேறு மோசடி செயல்கள் இடம்பெறுவதாக அறியக் கிடைத்துள்ளது.
அவர்களின் இந்த செயற்பாடுகள் ஜனாதிபதியினதும் ஜனாதிபதி செயலகத்தினதும் அனுமதியின்றியே இடம்பெற்றுள்ளன என்பதை பொதுமக்களுக்கு தயவுடன் அறியத்தருகின்றோம்.
அதேவேளை, அத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் தகவலறியக் கிடைப்பவர்கள் தாமதமின்றி உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் இத்தகைய மோசடிகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் எனவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply