மனிதனை ‘உயிருடன்’ சாப்பிட்ட நாய்கள்:

ஸ்பெயினின் பிரபல சுற்றுலா தளமான டெந்ர்ஃப் தீவில், நபர் ஒருவரை நாய்கள் உயிருடன் சாப்பிட்டதாக அஞ்சப்படுகிறது.

லாலகுனா நகரத்திலே இந்த பயங்கர சம்பவம் இடம்பெற்றுள்ளது. நபர் குறித்து தகவல் கிடைத்தவுடன் பொலிசார் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர்.

கத்தியால் குத்தப்பட்டு மற்றும் கடுமையாக கடிக்கப்பட்ட காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் நபர் இறந்து கிடந்துள்ளார்.

மிகவும் ஆபத்தான இனத்தைச் சேர்ந்த இரண்டு நாய்கள், நபரின் ஒரு கையை சாப்பிட்டுள்ளது. நாய்கள் தங்களை தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் பொலிசார் தற்காப்புக்காக பொலிசார் இரண்டு நாய்களையும் சுட்டுக்கொன்றுள்ளனர்.

பிரேத பரிசோதனை இடம்பெற்று வருகிறது. அவர் கத்தி காயங்களால் இறந்தாரா அல்லது நாய்கள் அவரது கை சாப்பிடும் போது உயிரோடு இருந்தாரா என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும்.

தற்போது சம்பவயிடத்தில் தடயங்கள் மற்றும் ஆயுதம் ஏதேனும் இருக்கிறதா என பொலிசார் சோதனை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த 40 வயதுடைய நபர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

கையை நாய்கள் கடித்த நிலையில், அவரை யாரேனும் கத்தியால் குத்தினார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *