
தமிழகத்தில் இரயில் தண்டவாளத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்த நாட்டை பூர்வீகமாக கொண்டவர் உத்திராபதி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளாக திருச்சியில் தங்கி மருந்து விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ரோடு ரயில்வே நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் உத்திராபதி தன்னுடைய மனைவி மற்றும் மகள், மகன் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்துள்ளார்.
அப்போது அங்கு எதிரே வந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று இவர்கள் மீது பலமாக மோதியதால், நான்கு பேரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்க, விரைந்து வந்த பொலிசார் அவர்களின் உருக்குலைந்து கிடந்த அவர்களின் உடலை மீட்டனர்.
அதன் பின் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லை காரணமாக உத்திராபதி கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்ததாகவும், இதன் காரணமாக மனமுடைந்து அவர் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் இது தொடர்பாக பொலிசார் தொடர்ந்து அவர்கள் உறவினர்களிடம் இது தான் காரணமா? அல்லது வேறு எதுவும் பிரச்சனையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply