
தமிழ் மக்களின் நியாயயமான கோரிக்கைகளை அடைய தன்னை உற்சாகப்படுத்த, சமாதான நடைபயணத்தை ஆரம்பித்துள்ள சகாதேவன் வவுனியா மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டில் சமாதானத்தை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தை சேர்ந்த வி.சகாதேவன் என்பவர் மாதகல், சம்புமல் துறையிலிருந்து நடைப்பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இவரது நடைபயணம் நாளைய தினம் வவுனியாவை வந்தடையவுள்ள நிலையிலே இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் மாங்குளம் பகுதியை வந்தடைந்த சகாதேவனுக்கு அப்பகுதி மக்கள் வரவேற்பளித்ததுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த நடைபயணம் நாளைய தினம் வவுனியாவை வந்தடையவுள்ள நிலையில் சகாதேவன் கருத்து தெரிவிக்கையில்,
எம் மக்களின் வரவேற்பு மற்றும் காணாமலாக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைகளை சுமந்து செல்கிறேன். வவுனியா இளைஞர்களே, மக்களே கட்சி பேதமின்றி ஆதரவு தாருங்கள்.
சிங்கள சகோதரர்களை சந்தித்து நல்லிணக்க முயற்சிகளை ஆரம்பித்து அரசியல் கைதிகள் விடுதலை உட்பட தமிழ் மக்களின் நியாயயமான கோரிக்கைகளை அடைய என்னை உற்சாகம் அளிக்குமாறு வவுனியா இளைஞர்களுக்கும் மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.
Leave a Reply