இந்தியாவில் தூக்கிலிடப்பட்ட யாழ்ப்பாண மன்னன்!…

சங்கிலி குமாரன் அல்லது இரண்டாம் சங்கிலி அல்லது ஒன்பதாம் செகராசசேகரன் என்பவர் தான் யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி அரசன் ஆவார்.

1591 ஆம் ஆண்டில் தளபதியான அந்தரே பூர்த்தாடு என்பவன் தலைமையில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கேயப் படைகள் யாழ்ப்பாண அரசனைக் கொன்றுவிட்டு எதிர்மன்னசிங்கம் என்பவனை அரசனாக்கினர்.

எதிர்மன்னசிங்கம் இறந்தபோது அரசுக்கு வாரிசான அவனது மகன் குழந்தையாக இருந்தான். இதனால், அரசனின் மச்சினனான அரசகேசரி என்பவனைப் பகர ஆளுநராக நியமித்தனர்.

இதனை விரும்பாத சங்கிலி குமாரன், அரசகேசரியைக் கொன்று நிர்வாகத்தைத் தான் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

சங்கிலி குமாரன் தொடக்கத்திலிருந்தே போத்துக்கீசரின் நடவடிக்கைகளை எதிர்த்து வந்தான்.

இதன்முடிவாக போர்த்துக்கேயர் கொழும்பில் இருந்தும், இந்தியா கோவாவில் இருந்தும் 5000 போர் வீரர்கள் கொண்ட படையணிகளை அனுப்பி யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர்.

சங்கிலி குமாரனை கைது செய்து கொழும்புக்கு கொண்டுச்சென்றப் போர்த்துக்கேயர், பின்னர் இந்தியா கோவாவிற்கு கொண்டுச்சென்று அங்கே 1621 ஆம் ஆண்டு தூக்கிலிட்டனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *