
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்ககட்டிகளில் செய்த சுமார் 100 பவுனுக்கு மேற்பட்ட நகைகள் மற்றும் 10 லட்சம் ரூபாய் பணத்தை பொலிசார் பறிமுதல் செய்த நிலையில், 3 பேரை கைது செய்து 7 பேரை தேடி வருகின்றனர்.
தமிழகத்தின் ராமேஸ்வரம் மனோலி தீவுப் பகுதியில் கடந்த 7-ஆம் திகதி வருண்குமார் எஸ்.பி.சப் கலெக்டர் சுகபுத்ரா சோதனை நடத்திய போது, அங்கு கஞ்சா தங்கம் கடத்தியதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.
இதனால் இது தொடர்பாக பொலிசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், சென்னை நகைக்கடை உரிமையாளர் கியாஸ் படகோட்டி புலிப்படை என்பவர் மூலம் 70 கிலோ கஞ்சாவை கடத்தி இலங்கையில் சேர்த்துவிட்டு தங்கம் கடத்தி வந்து ராமநாதபுரம் மாவட்டம் சீனியப்பா தர்ஹா பகுதியில் சிலரிடம் கொடுத்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு சுந்தரமுடையான் பகுதியில் வேன் ஒன்றை பொலிசார் சோதனை செய்த போது, அதில் வந்த பெருங்குளம் ரஞ்சித் (26), விஜய் (29), காளிராஜ் (51), ஆகியோரிடம் இருந்து 53 பவுன் நகை 4.73 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
தனிப்படை பொலிசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளை நகைகளாக மாற்றி கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட ரஞ்சித் வீட்டில் 132 பவுன் நகையும் 5.36 லட்சம் ரூபாய் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்த பொலிசார். அதனையும் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் கியாஸ் மூலம் கடத்தலில் ஈடுபட்டுவந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதில் மேலும் சிலருக்கு தொடர்பிருப்பதாக கூறப்படுவதால், தனிப்படை பொலிசார் அவர்களை தேடி வருகின்றனர்.
Leave a Reply