
ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பில் திருத்தங்களை செய்யத் தேவையான ஆலோசனைகளை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் கட்சியின் சட்ட வல்லுநர்களுக்கு இவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக சஜித் பிரேமதாஸவிற்கு கட்சியின் தலைமைப்பதவி வழங்கப்பட வேண்டும் என கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினர் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இந்தநிலையிலேயே கட்சியின் யாப்பில் திருத்தங்களை செய்யத் தேவையான ஆலோசனைகளை வழங்குமாறு ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை செயற்குழுக் கூட்டத்தை கூட்டுமாறு உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்திருந்தாலும் உடனடியாக அது கூட்டப்படும் சாத்தியம் இல்லையெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply