
தமிழகத்தில் பிறந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக அங்கேயே வசித்து வரும் தனக்கு இந்தியா குடியுரிமை வழங்காவிட்டால் தன்னை கருணைக்கொலை செய்திடுங்கள் என இலங்கை தமிழர் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் யனதன்.
இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தார்.
அந்த மனு தொடர்பில் யனதன் கூறுகையில், என் பெற்றோர் கடந்த 1990ஆம் ஆண்டு இலங்கை போரின் போது இந்தியாவுக்கு வந்து சேலத்தில் தஞ்சமடைந்தனர்.
நான் 1991ஆம் பிறந்தேன் தமிழகத்திலேயே படித்து பட்டம் பெற்று இங்கேயே வாழ்ந்து வருகிறேன். ஆனால் எனக்கு குடியரிமை மறுக்கப்பட்டு உள்ளது மிகுந்த மன வேதனை அளிக்கிறது.
இந்த நிலை எனது சந்ததியருக்கும் வர கூடாது என்பதற்காக என்னை கருணைக் கொலை செய்திட கோரிக்கை விடுத்து உள்ளேன் என கூறியுள்ளார்.
Leave a Reply