குளியல் தொட்டியில் அழுகிய நிலையில் மொடல் அழகியின் உடல்!

அவுஸ்திரேலியாவில் மொடல் அழகியின் உடல் 8 மாதமாக வீட்டின் குளியல் தொட்டியில் கிடந்த அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது.

சாரா கேட் (40) என்ற முன்னாள் மொடல் அழகியின் உடல் கடந்தாண்டு ஜனவரி மாதம் அழுகிய நிலையில் அவர் வீட்டில் இருந்த குளியல் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது.

இது தொடர்பான விசாரணையில் சாரா குளியல் தொட்டியில் கண்டெடுக்கப்படுவதற்கு எட்டு மாதங்களுக்கே முன்னரே கொலை செய்யப்பட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் விக்டோரியாவை சேர்ந்த 52 வயது நபரை பொலிசார் கைது செய்தனர்.

சட்டச்சிக்கல் காரணமாக அவர் பெயரை பொலிசார் வெளியிடவில்லை. சாராவை கொலை செய்த பின்னர் வீட்டில் இருந்த பணத்தையும் அவர் திருடி சென்றது தெரியவந்தது.

இது தொடர்பில் மேலும் ஐந்து பேரிடம் பொலிசார் விசாரணை நடத்தினார்கள், ஆனால் அதில் யார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

சாரா போதை பழக்கத்துக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.

இது குறித்து அவர் தாய் கூறுகையில், சாரா எந்த விடயத்தையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டார், தன் மனதுக்குள் அனைத்தையும் புதைத்து கொள்வார்.

போதை பழக்கம் தான் அவள் வாழ்க்கையை அழித்தது என கூறியுள்ளார்.

அதே சமயத்தில் இந்த கொலையில் பல்வேறு மர்மங்கள் நீடித்து வரும் நிலையில் இது தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *