தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார் – கருணா

தமிழர்களின் நலன் கருதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தான் தயாராகவே உள்ளதாக கருணா அம்மான் எனப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்திற்கு வேறு பிரச்சினைகள், கிழக்கு மாகாணத்திற்கு வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.

கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட்டால் தான் பல நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்க முடியும் அல்லது தமிழ் முதலமைச்சரவை உருவாக்க முடியும் எனவும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *