
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டம் பற்றி எரியும் சூழலில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்திய குடியுரிமை சட்டத்திருத்தமானது கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டது. இதில் அண்டை நாடுகளை சேர்ந்த முஸ்லீம் மக்களை தவிர்த்து மற்ற மதங்களை சேர்ந்தவர்கள் 6 வருடங்களுக்கும் மேல் இந்தியாவில் அகதிகளாக தங்கியிருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல இலங்கை தமிழர்களுக்கும் வழங்கப்பட மாட்டாது எனவும் கூறப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்கள் முழுவதும் தொடர்போராட்டம் நடத்து வரும் நிலையில், நேற்றைய தினம் அமைதியான வழியில் அறப்போட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த டெல்லி ஜாமியா மிலியா மாணவர்கள் மீது பொலிஸார் கடும் தாக்குதல் நடத்தினர்.
இதில் மாணவர்கள், மாணவிகள் பலரும் காயமடைந்ததோடு, 50க்கும் மேற்பட்டோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
நள்ளிரவில் பற்றிக்கொண்ட இந்த போராட்ட தீயானது இன்று நாடுமுழுவதும் பல்வேறு கல்லூரிகளில் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய பிரபலங்கள் பெரும்பாலானோர் வாய்திறக்காத நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
Leave a Reply