பள்ளி மாணவர்களைப்போல் முதல் நாள் பணிக்கு படைதிரண்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

பிரித்தானியா முழுவதிலும், நாடாளுமன்றத்தின் முதல் நாள் பணிக்காக பள்ளி மாணவர்களைப்போல் நீல நிற உடையணிந்து லண்டன் நோக்கி பயணிக்கும் புதிதாக தெரிந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம்தான்.

பிரபல பிரித்தானிய பத்திரிகை ஒன்று, நீல சுனாமி என அவர்களை வர்ணித்துள்ளது. நாடாளுமன்றத்தின் முதல் நாள் பணிக்காக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 109 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகும் புகைப்படங்கள் பல வெளியாகியுள்ளன.

இதுவரை கன்சர்வேட்டிவ் கட்சியினர் வெற்றிபெற தடுமாறிய பல தொகுதிகளில் மக்கள் ஜெரமி கார்பினுக்கு எதிராக வாக்களித்து வரலாற்று வெற்றியை அளித்துள்ளனர்.

இப்போது, அந்த புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பெரும்பாலும் வடக்கிலுள்ளவர்கள், லண்டன் நோக்கி தங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் தலைநகரம் நோக்கி பயணிக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

அவற்றில், பிரெக்சிட்டை நிறைவேற்றும் வாக்குறுதியை நிறைவேற்ற அவர்கள் மகிழ்ச்சியுடன் புறப்படுவதை தெளிவாகவே காணமுடிகிறது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *