
மன்னார்- கோந்தைப்பிட்டி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகநபர் மூவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் மன்னார் மற்றும் சிலாபத்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்களென கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து கோந்தைப்பிட்டி கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 3 பேரை சோதனைக்கு உட்படுத்தினர்.
இதன்போது குறித்த மூவரிடமிருந்து 490 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை படையினர் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர், போதைப்பொருள் வாங்க வந்தவர் என்றும் ஏனைய இருவர் அப்பகுதியில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் என்றும் மேலதிக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply