
வடக்கு மாகாண ஆளுநராக சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான திருமதி சார்ள்ஸை நியமிக்க உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்து வரும் சில தினங்களில் வட மாகாண ஆளுநராக ஜனாதிபதி முன்னிலையில், திருமதி சார்ள்ஸ் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் 8 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், வட மாகாணம் தொடர்பில் இழுபறி நிலை காணப்பட்டது.
இந்நிலையில் திருமதி சார்ள்ஸை ஆளுநராக நியமிக்க ஜனாதிபதி முடிவு எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.
முன்னதாக சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளராக திருமதி சார்ள்ஸ் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply