வலிப்பு வந்து சரிந்த தாய்… முதலுதவி செய்து காப்பாற்றிய மகள்:

பிரித்தானியாவில் வலிப்பு நோய் வந்த தாய்க்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக எண்ணி அவளுக்கு முதலுதவி செய்து காப்பாற்றியிருக்கிறாள் ஒரு 7 வயது குழந்தை.

தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது தனது தாய் Becky Green (32) திடீரென சுயநினைவற்று விழுவதைக் கண்ட Jessica Kinder, அம்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக எண்ணி Cardiopulmonary resuscitation என்னும் CPR (மார்பை அழுத்தி, வாயில் ஊதி செயற்கை சுவாசம் அளிக்கும் முறை) முதலுதவி சிகிச்சை அளித்துள்ளாள்.

அத்துடன், அம்மா முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரை எழுப்ப முயன்றதோடு, அவசர உதவி எண்ணையும் தொலைபேசியில் அழைத்திருக்கிறாள் Jessica.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Beckyக்கு வலிப்பு நோய் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது உடல் நலம் சீரடைந்து வீடு திரும்பியிருக்கும் Becky தன் மகளிடம், உனக்கு எப்படி CPR செய்யத் தெரியும் என்று கேட்டால், யூடியூபில் பார்த்திருக்கிறேன், அதை வைத்துதான் முயற்சி செய்தேன் என்று கூறியிருக்கிறாள்.

என் மகள் நான் இறக்கபோவதாக எண்ணி என்னைக் காப்பாற்ற முயன்றிருக்கிறாள், அவள் ஒரு ஹீரோ என்கிறார் Becky.

பள்ளி திரும்பிய Jessicaவுக்கு துணிச்சல் விருது வழங்கப்பட்டுள்ளது. வளர்ந்து ஒரு மருத்துவராகவோ நர்ஸாகவோ ஆகவேண்டும் என விரும்புகிறாள் அவள்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *