
மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரினால் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கைது செய்யப்படாமல் இருந்த சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Leave a Reply