வெளிநாட்டில் இருந்து கர்ப்பிணி மனைவியை துரத்தியடித்த தமிழர்

வெளிநாட்டில் இருந்து கர்ப்பிணி மனைவியை ஊருக்கு அனுப்பிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்த தமிழக இளைஞர் ஊருக்கு வந்த போது பொலிசில் வசமாக சிக்கினார்.

சென்னையை அடுத்த பரங்கிமலையை சேர்ந்தவர் சிந்தியா (30). இவர் கடந்த ஏப்ரல் மாதம் பொலிசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அதில், கடந்த 2013ல் எனக்கும் திண்டுக்கல்லை சேர்ந்த ரபேல் ஆரோக்கியராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

பின்னர் சிங்கப்பூரில் நாங்கள் குடும்பம் நடத்தினோம். நான் 40 நாட்கள் கர்ப்பிணியாக இருந்தபோது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி என்னை சென்னைக்கு அனுப்பிவிட்டார்.

தற்போது எனக்கு 5 வயதில் மகன் உள்ளான், எனவே ரபேல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இதனிடையில் ரபேல் வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டு சிங்கப்பூரில் வாழ்ந்து வந்ததாகவும் பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விமான நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர்.

இந்நிலையில் ரபேல் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம், மதுரை வருவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மதுரை விமான நிலையத்தில் ரபேலை கைது செய்தனர். அவரிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *