
சுவிஸ் தூதரக ஊழியர் விடயத்தில் இலங்கை உரிய செயன்முறையை பின்பற்றவில்லை என சுவிஸ் மத்திய வெளிவிவகார அமைச்சு கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.
சுவிஸ்தூதரக பெண் ஊழியர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக சுவிஸ் மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் “தூதரக பணியாளர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகள் தேசிய சட்டம் மற்றும் சர்வதேச நீதித் தரங்களுக்கு இணங்க வேண்டும்.
பணியாளரின் உரிமைகள் இப்போது சிறப்பாகப் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் இதனையே சுவிஸ் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சு எதிர்பார்க்கின்றது.
அத்துடன் எமது பணியாளராக, பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் எங்கள் கடமைகளை பூர்த்தி செய்யவும், பணியாளரின் மோசமான உடல்நிலைக்கு உரிய கவனம் செலுத்தவும் இலங்கை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
இந்த உயர்மட்ட வழக்கில், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் ஒரு நாடு என்ற இலங்கையின் நற்பெயருக்கு ஆபத்து உள்ளது என்பதை சுவிட்சர்லாந்து வலியுறுத்த விரும்புகிறதாகவும்” அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது , இலங்கைக்கு எந்த தீங்கும் விளைவிக்கும் நோக்கம் சுவிஸர்லாந்துக்கு இல்லை என இலங்கையில் உள்ள சுவிஸ் தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மோக் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply