
திருகோணமலை பகுதியில் வைத்தியர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் இன்று குறித்த இருவரை ஆஜர்படுத்திய போதே எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் திருகோணமலை சல்லி பகுதியைச் சேர்ந்த 36 மற்றும் 34 வயதுடைய கணவன் மற்றும் மனைவி எனத் தெரியவருகின்றது.
திருகோணமலையில் அமைந்துள்ள கோகுலன் நிரஞ்சனா என்ற வைத்தியருடைய வீட்டில் 4 இலட்சத்து 4000 ரூபாய் பணம் மற்றும் நகைகளை கொளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கணவன் மற்றும் மனைவி என இருவரை கைது செய்திருந்தனர்.
Leave a Reply