
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படும் கட்சித்தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.
கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று(செவ்வாய்கிழமை) மாலை இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதன்போது, ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் மற்றும் சபை முதல்வர் நியமனம் தொடர்பாக அவதானம் செலுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன், நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் குறித்தும் இதன்போது ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக மொட்டு சின்னத்தின் கீழ் பொதுத்தேர்தலில் போட்டியிட சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வருவதாக கூறப்படுகின்றது.
எனவே இந்த விவகாரம் குறித்தும் இதன்போது ஆராயப்படலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, குறித்த கூட்டத்தில் பங்கேற்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படும் கட்சித்தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Leave a Reply