
தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் சர்வதேச நாய் சண்டை கும்பலை பொலிசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
சாவோ பாலோ நகரில் மைரிப்போர பகுதியில் உள்ள ரகசிய பண்ணையில் இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதில், மருத்துவர், கால்நடை மருத்துவர், பொலிஸ் அதிகாரி மற்றும் ஒரு அமெரிக்கர் உட்பட 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கள் தந்தையுடன் வந்ததாகக் கூறப்படும் 12 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவர்களும் கொடூர விளையாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
சம்பவயிடத்திலிருந்து பிட்புல், நாய் குட்டிகள் என 19 கடுமையாக பாதிக்கப்பட்ட வாயில்லா ஜீவன்கள் மீட்கப்பட்டுள்து.
ஆயுதங்களுடன் சம்பவயிடத்தில் பொலிசார் நுழைந்த போது, பயங்கரமாக சண்டையிடும் இரண்டு நாய்களை மடக்குகிறார். அங்கு நாய்கள் சாகும் வரை சண்டையிடும் விளையாட்டு நடைபெற்று வந்ததாக விசாரணை மேற்கொண்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது டொமினிகன் குடியரசில் கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச நாய் சண்டை வளையத்தில் ஒரு பகுதியாகும் என்று பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவயிடத்தில் பொலிசார் சோதனை மேற்கொண்ட போது கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு அமெரிக்கர் நாய் சண்டையின் நடுவராக செயல்பட்டு வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும், அங்கு சண்டையில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாய்கள் கட்டி வைக்கப்பட்டிருந்துள்ளது. மேலும், பார்பிக்யூ செய்யப்பட்ட நாயின் இறைச்சி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட நபர்களுக்கு நாய் பார்பிக்யூ பரிமாறப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். உலகெங்கிலும் உள்ள மக்கள் இணையதளம் மூலம் இந்த போட்டியில் பந்தயம் கட்டி விளையாடி வந்ததை அங்கிருந்த கைப்பற்றிய ஆதாரங்கள் மூலம் பொலிசார் கண்டறிந்துள்ளனர்.
பரணா மாநிலத்தில் உள்ள வளர்ப்பாளர் மற்றும் பயிற்சியாளரை குறிவைத்து பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏறக்குறைய அனைத்து சந்தேக நபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர், , வெளிநாட்டவர்கள் பிரேசிலிலிருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது என்று உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.
எனினும், நிகழ்வை ஏற்பாடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபரை விடுவிப்பதற்கு நீதிபதி தடை விதித்துள்ளார்.
Leave a Reply