
கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் ஊழியர் ஒருவர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் நடக்கவேயில்லை என்பது தெளிவாகத் தெரிகிறதென இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஊடக பிரதானிகளை சந்தித்து கலந்துரையாடலில் ஜனாதிபதி நேற்று (திங்கட்கிழமை) ஈடுபட்டப்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ சுவிஸ் தூதருடன் இந்த விடயம் தொடர்பாக விவாதித்தேன்.
மேலும் இதுபோன்ற எந்த சம்பவமும் நடக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சாட்சியங்கள் மற்றும் சி.சி.டி.வி காணொளி காட்சிகள்ஆகியவற்றை உள்ளடக்கி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சுவிஸ் தூதரக ஊழியர் ஏன் இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்தார் என்று தெரியவில்லை. அவர் புலனாய்வாளர்களுடன் ஒத்துழைக்காததால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
Leave a Reply