தனித்தீவு வைத்திருக்கும் கோடீஸ்வர தந்தை மகள்களுக்கு கொடுத்த கிறிஸ்துமஸ் பரிசு! என்ன தெரியுமா?

ஸ்காட்லாந்தில் தனித்தீவை சொந்தமாக வைத்திருக்கும் கோடீஸ்வரர் தனது மகள்களுக்கு அளித்துள்ள வித்தியாசமான கிறிஸ்துமஸ் பரிசு தொடர்பான புகைப்படம் வைரலாகியுள்ளது.

Roc Sandford என்பவர் பெரும் கோடீஸ்வரர் ஆவார், இவருக்கு தனித்தீவு சொந்தமாக உள்ளது.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை அந்த நாளுக்கு முன்னரே தனது இரண்டு மகள்களான Savannah (20) மற்றும் Blue (17) ஆகியோருடன் கொண்டாட Roc முடிவு செய்தார்.

இதை தனது சொந்த தீவிலேயே நேற்று கொண்டாடினார். அப்போது தனது மகள்களுக்கு பரிசு ஒன்றை அவர் கொடுத்தார்.

பெரிய பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அது என்ன பரிசாக இருக்கும் இருக்கும் என இருவரும் ஆர்வமுடம் திறந்து பார்த்த போது உள்ளே குப்பைகளால் செய்யப்பட்ட கலைப்பொருட்கள் இருந்தன.

இது குறித்து Roc கூறுகையில், என் மகள்கள் நான் கொடுத்த பரிசை பிரித்து பார்த்து போது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

சாலையில் நான் எடுத்த குப்பைகள், மணல்கள் கொண்டு கலைப்பொருட்களாக வடிவமைத்தேன்.

அதில் சில கலைப்பொருட்களை லண்டனில் உள்ள கலைக்கண்காட்சியிலும் வைத்துள்ளேன்.

கோடீஸ்வர தந்தையிடம் இருந்து இது போன்ற பரிசை என் மகள்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள், அந்த வகையில் இது அவர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சி தான் என புன்னகையுடன் கூறியுள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *