
மகனுக்கு அரைகாற்சட்டை எடுத்து சென்ற தாய் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று காலியில் இடம்பெற்றுள்ளது.
காலி சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மகனை பார்க்க சென்ற தாயே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள அவரின் மகன், பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை பார்க்கசென்ற அவருடைய தாய், அரைகாற்சட்டையின் வாட்டியில், மிகவும் சூட்சுமமான முறையில், ஹெரொய்னை மறைத்துவைத்து எடுத்து சென்றுள்ளார்.
இந்நிலையில் அந்த அரைகாற்சட்டையின் மீது சந்தேகம் எழுந்ததையடுத்து, அதனை பரிசோதித்த சிறைச்சாலை அதிகாரிகள், அதிலிருந்து ஹெரொய்னை கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து, அந்த தாய் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, , காலி பொலிசாரிடம் அவரை ஒப்படைத்துள்ளதாக, சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Leave a Reply