வடமாகாணத்தின் ஆளுநர் இல்லாமையால் சிவில் நிர்வாகம் ஸ்தம்பிதம்! எம்.கே.சிவாஜிலிங்கம்

ஆளுநர் இல்லாமையினால் வடமாகாணத்தின் சிவில் நிர்வாகம் ஸ்தம்பிதம் இது மாற்றாந்தாய் மனப்பான்மையை எடுத்துக் காட்டுவதாகவுள்ளது விரைவில் ஆளுநர் நியமனம் இடம்பெற்று சட்ட நடவடிக்கைகள் சீர் செய்யப்படவேண்டும் அவ்வாறு இல்லாது விடின் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டங்களை நடாத்தவேண்டிய சூழல் ஏற்படும் என முன்னாள் மாகாண சபையின் உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதியால் வடக்கு மாகாண ஆளுநர் இதுவரை நியமிக்கப்படாதமை தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி ஏற்றதுடன் அனைத்து ஆளுநர்களையும் நீக்கிவிட்டு புதியவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆறு மாகாணங்களுக்கு ஒரே தடவையில் நியமனம் செய்யப்பட்டு அதன் பின்னர் வட மத்திய மாகாணம் பின்னர் கிழக்கு மாகாணம் ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் வடமாகாணத்திற்கு ஆளுநரை இது வரை நியமனம் செய்யப்படவில்லை.

தேர்தல் முடிவடைந்து ஒரு மாதம் கடந்த சூழலிலும் ஜனாதிபதி ஆளுநர்களை பொதுத் தேர்தலுக்கு பின்னரே அல்லது ஒரு மூன்று மாதங்களுக்கு பின்னரே ஆளுநர்களை மாற்றம் செய்திருக்கலாம் அவ்வாறு இல்லாத நிலையில் உடனடியாகவே மாற்றங்கள் செய்தபின்னர் வடமாகாணத்திற்கு மட்டும் நியமிக்காது இருப்பது குறிப்பாக வடக்கு மாகாண சபையின் நிர்வாகம் இல்லாத செயலில் இது மட்டுமன்றி உத்தியோக பூர்வ விஜயமாக வடக்கு மாகாணத்தில் பிரதம செயலாளர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் ஆளுநர் இல்லை முதலமைச்சர் இல்லை பிரதம செயலாளர் இல்லை என்ற நிலையில் வடக்கு மாகாணம் மோசமான நிலையில் தான் உள்ளது.

குறிப்பாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படத்தக்க வகையில் வடக்கில் அத்துமீறிய மண் அகழ்வுகள் அரச நிலத்தில் இருந்தும் தனியார் நிலத்திலிருந்தும் இரவு நேரங்களில் ஆயிரக்க கணக்கான டிப்பர்களில் மண் அகழப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றது.

இவ்வாறு மண் சூறையாடப்படுவதை எவரும் தடுப்பாரும் இல்லை கேட்பாரும் இல்லை இந்த விடையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரே மாவட்ட செயலாளரே பிரதேச செயலாளர்களே நடவடிக்கை எடுக்கலாமா என்பது தெரியவில்லை. எனவே இவர்களுக்கான உத்தரவுகளை வழங்கக்கூடிய சிவில் நிர்வாகம் ஸ்தம்பித்திருக்கின்றது அல்லது இல்லை என்ற நிலையைத்தான் யாழ்ப்பாணம் உட்பட வடமாகாணம் சந்தித்துள்ளது.

ஆங்காங்கே திடீர் சோதனைச் சாவடிகள் மற்றும் வீதிகளில் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருந்தாலும் இவர்களால் சட்டவிரேத மண் அகழ்வை நிறுத்த முடியுமா என்ற கேள்வி எழுகின்றது. இன்னுமொரு விடையமாக மண்ணை கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம் தான் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரச நிலங்களிலே தனியார் நிலங்களிலே அத்துமீறி மண் அகழ்வு செய்யவேண்டும் என்ற நிலை அல்ல ஆகவே இதைத் தடுப்பதற்கு கிராம அலுவலரே பிரதேச செயலாளரே அரசாங்க அதிபரே பொலிஸாரே நடவடிகை எடுப்பார்களே தெரியவில்லை. தற்போதைய சூழலில் அரசாங்க அதிபர் மாற்றப்படவுள்ளார் என்ற நிலையே ஏற்பட்டுள்ளது. ஒரு சில அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுவதாக தெரியவருகின்றது.

இவ்வாறான நிலைமையானது தமிழ் மக்களை திட்டமிட்டு பழிவாங்கப்படுகிறார்களா என்று நினைக்கத் தோன்றுகின்றது. வடமாகாண ஆளுநராக யாரையாவது ஒருவரை அதுவும் நீங்கள் விரும்புகின்ற ஒருவரைத்தான் நியமிக்கப்போகின்றீர்கள். அவ்வாறான நிலையில் ஏன் இதற்கு இவ்வளவு கால தாமதம் மாற்றாந்தாய் மனப்பாங்கதான் எங்கள் மீது காட்டப்படுகின்றது என்ற மனநிலைதான் எங்கள் மக்கள் எண்ணுகின்றாரகள் இதற்கு உடனடியாக முடிவு எடுக்கப்படாது விட்டால் நாங்கள் ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிராக ஆளுநர் அலுவலகத்தை முடக்குவதற்கான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என்பதை அரசாங்கத்திற்கு எச்சரிக்கையாக தெரிவித்துத் கொள்கின்றோம் என்றார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *