
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் போது அமெரிக்க பிரஜைகள் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்க தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நத்தார் பண்டிகைக் காலத்தில் இலங்கைக்கு சுற்றுலா செல்லும் தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க பிரஜைகளுக்கு விடுக்கப்படும் இரண்டாம் நிலை முன்னெச்சரிக்கை இதுவென என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் ஆராதனையின் போது ஐ.எஸ் பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலில் 300 இற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்திருந்தனர்.
அத்துடன், 350 இற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையிலேயே தமது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply