
பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவின் மேத்யூவ் வேட் மற்றும் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் நெய்ல் வாக்னர் வார்த்தை போரில் ஈடுபட்டனர்.
நியூசிலாந்து அணி, அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கிடையே பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 296 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இப்போட்டியின் போது அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்ட வீரரான மேத்யூவ் வேட்டிற்கும், நியூசிலாந்தின் வீச்சாளர் நெய்ல் வாக்னருக்கும் வார்த்தை போர் ஏற்பட்டது.
இதையடுத்து நெய்ல் வாக்னர் தன்னுடைய அசுரவேகத்தின் மூலம் பவுன்சர் பந்துகளால் மேத்யூ வேட்டின் உடம்பிலே குறிவைக்கும் அளவிற்கு பந்து வீசினார். அதே சமயம் அவரின் விக்கெட்டை வீழ்த்தவும் நினைத்தார், ஆனால் வேட் விக்கெட் விட்டுவிடக் கூடாது என்பது போல் அவரின் பந்தை உடல்களில் வாங்கி கொண்டார்.
அந்த வீடியோவை அவுஸ்திரேலியா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
Leave a Reply