இலங்கை அரசாங்கத்திற்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி இணக்கம்

இலங்கையின் முக்கிய அரச மற்றும் பொது நிதி மேலாண்மை நடவடிக்கைகளின் வெளிப்படைத்ததன்மை மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

பொதுத்துறை வினைத்திறனை வலுப்படுத்தும் திட்டம், நிதி அமைச்சின் நிறுவன ரீதியான திறனை வலுப்படுத்தி அதனுடாக வினைத்திறனை மேம்படுத்தவும் சிறந்த சேவைகளை வழங்கவும் உதவும். இந்த ஐந்தாண்டு திட்டதின் முக்கிய இயக்கிகளாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதிகரித்த மனித வளத்திறன்களின் பயன்பாடு அமைந்திருக்கும்.

முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் நிதி மற்றும் பொறுப்புக்கூறலை வலுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப மானியமாக 10 மில்லியன் யூரோக்களை வழங்கி ஐரோப்பிய ஒன்றியம் திட்டத்தின் ஓர் பங்காளராக செயற்படும் என உலக வங்கி அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த நேபாளம் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் ஐடா இஸட் ஸ்வராய் ரிடிகொவ் “பொது நிதி முகாமைத்துவ விடயத்தில் உலக வங்கி மற்றும் அரசாங்கத்திற்கிடையிலான நீண்ட கால ஒத்துழைப்வை அடியொற்றியதாக இந்த திட்டமானது கட்டியெழுப்பப்படும். அத்தோடு இலங்கை அரசாங்கத்தின் மு ன்னுரிமைக்குரிய மறுசரீமைப்பு பகுதிகளுக்கு ஆதரவளிக்கப்படும்” என தெரிவித்தார்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த உலக வங்கி செயலணியின் தலைவரும் சிரேஸ்ட நிதி முகாமைத்துவ விசேட நிபுணருமான மோகன் கோபாலகிருஸ்ணன், “இலத்திரனியல் கொள்முதல் போன்ற ஸ்மார்ட் தொழில்நுட்ப அடிப்படையிலான பயன்பாடு எளிமைப்படுத்தல் மூலமாக பொது நிறுவனங்களின் வினைத்திறனை மேம்படுத்துவதுடன் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புகூறலை முன்னேற்றும் இந்த திட்டமானது மேலும் பொது நிதி நிர்வாகத்தில் சர்வதேச அனுபவத்தினைப் பயன்படுத்திக்கொள்வதனுடாக விளைவுகளின் தாக்கத்தினை அதிகரிப்பதற்கு வழிகோலும்” என  தெரிவித்தார்.

மீள் நிர்மாணம் மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியிலிருந்து வழங்கப்படும் 225மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இந்த கடன் உதவியானது 11 வருடங்கள் கருணைக்காலம் அடங்கலாக 28 வருடகால இறுதி முதிர்வைக் கொண்டதாகும் என உலக வங்கி அறிவித்துள்ளது


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *