
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிளாஸ்டிக் பாவனையை தவிர்க்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கூட்டத்தின் போது குடி நீருக்காக பிளாஸ்டிக் போத்தல்களில் நீர் வைக்கப்பட்டிருந்தது.
எனினும் நேற்றைய தினம் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கூட்டத்தின் போது பிளாஸ்டிக் போத்தல்கள் அகற்றப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
அதற்கு பதிலாக கண்ணாடி கோப்பைகளில் நீர் வைக்கப்பட்டிருந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தை மற்றும் பல்வேறுபட்ட சந்திப்புக்களின்போது பிளாஸ்ரிக் தண்ணீர் போத்தல் வழங்குவதை நிறுத்துவதற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்ட தீர்மானத்தை சுற்றாடல் அமைப்புக்கள் வரவேற்றுள்ளன.
சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். ஆகவே, பிளாஸ்ரிக் தண்ணீர் போத்தல் வழங்குவதை முழுமையாக நிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்ரிக் தண்ணீர் போத்தல்களுக்குப் பதிலாக தண்ணீர் குவளைகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரச திணைக்களங்களிலும் இந்த நடைமுறையினை பின்பற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதியின் இத்தீர்மானத்தை சுற்றாடல் அமைப்புக்கள் வரவேற்றுள்ளன.

Leave a Reply