
ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி அரசுமுறை பயணமாக ஜப்பானுக்கு செல்லவுள்ளதாக, ஈரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி, தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) ஜப்பான் தலைநகர் டோக்கியோ செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸியும் உறுதிப்படுத்தியுள்ளார்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, ஈரான் தலைவர் ஒருவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் – அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் அமெரிக்காவின் நட்பு நாடான ஜப்பானுக்கு ஈரான் ஜனாதிபதி, மேற்கொள்வது சர்வதேச நாடுகளால் உற்றுநோக்கப்படும் ஒரு விடயமாக மாறியுள்ளது.
Leave a Reply