
கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சம்பவத்துடன், சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் மேலும் பல அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்ற விசாரணைத் திணைக்களம் கண்டறிந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்றே இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறிய சுவிஸ் தூதரக ஊழியர் கானியர் பனிஸ்டர் பிரான்சிஸ், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த விடயத்துடன் சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் மேலும் பல அதிகாரிகளும் தொடர்புபட்டுள்ளனர். அவர்களில் பெண் அதிகாரிகளும் உள்ளனர்.
அதாவது கைது செய்யப்பட்ட பெண் பணியாளரின் தொலைபேசி பதிவுகளில் இருந்தும் அவர் அளித்த வாக்குமூலத்தில் இருந்தும் இந்த நபர்களை குற்ற விசாரணைத் திணைக்களம் அடையாளம் கண்டுள்ளது.
எனவே அவர்களிடமும் விசாரணை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம்.
மேலும் கானியர் பிரான்சிசின் குற்றச்சாட்டு, பொய் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்” என குறித்த ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
Leave a Reply