
2020 பெப்ரவரி 20 ஆம் திகதி முதல் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) தீர்மானித்துள்ளது.
குறித்த வழக்கில் கிரிதலே இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாக செயற்பட்ட லெப்டினன் கேர்னல் ஷம்மி அர்ஜூன குமாரரத்ன உள்ளிட்ட இராணுவ புலனாய்வு உறுப்பினர்கள் 9 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் கடந்த மாதம் 27 ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை இரசியமாகவும் சட்டவிரோதமாகவும் தடுத்துவைக்கும் நோக்கில், கடத்தியமை மற்றும் கொலை செய்தமை உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுகளின் கிழே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
செய்தி இணையத்தளமொன்றில் சுதந்திர ஊடகவியலாளராக செயற்பட்ட பிரகீத் எக்னெலிகொட 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply