
தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டெல்லி என சில முக்கிய இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கமல் ஹாசன் உட்பட பல சினிமா பிரபலங்கள் இந்த சட்ட மசோதா, மாணவர்களின் போராட்டம், அரசின் நடவடிக்கை குறித்து தங்களைது கருத்துக்களை ஏற்கனவே வெளியிட்டுவிட்டனர்.
இந்நிலையில் பிரபல நடிகர் ராஜ்கிரண் பிரித்தாளும் சூழ்ச்சி என்பது காலம் காலாமாக புளித்து போன விசயம். இஸ்லாமியர்களை பாகிஸ்தான், அரபு நாடுகளிலிருந்து வந்தவர் போலவும் மக்கள் மனங்களில் பிரிவினை நச்சுக்களை விதைத்து விட்டார்கள்.
இந்த பொய் பிரச்சாரங்கள் எடுபடாது, சத்தியத்தை புதைத்துவிடமுடியாது. இஸ்லாமியர்கள் இந்துக்களின் ரத்த சொந்தங்கள் என கூறி பல விளக்கங்களை வெளியிட்டுள்ளார்.
Leave a Reply