
கென்யாவில் முதலைகள் இருக்கும் ஆற்றை பத்திரமாக கடப்பதற்காக தன் சிங்க குட்டிகளுடன் சேர்ந்து தாய் சிங்கம் செல்லும் அரிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கென்யாவில் Ewaso Ngiro-வில் வனவிலங்கு பூங்கா உள்ளது, இந்த பூங்காவில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட ஆற்றில் முதலைகள் அதிகம் இருக்கும், இதன் காரணமாக அந்த ஆற்றினை கடக்கும் போது அங்கிருக்கும் விலங்குகள் பாதுகாப்பாவே செல்லும்.
வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்…
ஆனால் குட்டிகளுக்கு அந்த ஆற்றில் முதலைகள் இருப்பது அந்தளவிற்கு தெரியாது என்பதால், தாய் சிங்கம் ஒன்று தன்னுடைய மூன்று சிங்ககுட்டிகளையும், பத்திரமாக அந்த ஆற்றை கடப்பதற்கு உதவுகிறது. இதில் ஒரு குட்டி சிங்கம் ஒன்று தண்ணீரில் ஓட, அப்போது இந்த தாய் சிங்கம், அதன் முதுகினை தன்னுடைய வாயால் பிடித்து இழுத்துவிட்டது.
அந்த நேரத்தில் முதலைகள் எதுவும் இல்லாததால், பாதுகாப்பாக சிங்கம் மற்றும் சிங்ககுட்டிகள் கடந்துவிட்டன, அதே சமயம் முதலைகள் இருந்திருந்தால் கண்டிப்பாக ஏதேனும் நடந்திருக்கும் என்று இந்த காட்சியை வீடியோவாக எடுத்த புகைப்பட கலைஞர், இத்தாலியை சேர்ந்த Luca Bracali கூறியுள்ளார்.
இது போன்று எல்லாம் பார்ப்பது மிகவும் கடினம், அற்புதமான வாய்ப்பு, அது தன் குழந்தைகளை(சிங்ககுட்டிகளை) எப்படி அழகாக பத்திரமாக அழைத்து செல்கிறது என கூறி முடித்தார். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Leave a Reply