
கட்சியின் தலைமை பதவி இல்லாமல், பிரதமர் வேட்பாளராக களமிறங்க மாட்டேன் என தெரிவித்துள்ளார் சஜித் பிரேமதாச.
இன்று கோட்டை பகுதியில் நடந்த மக்கள் சந்திப்பில் உரையாற்றிய போது, சஜித் இதனை தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் நான் பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தியை பார்த்தேன்.
கட்சி தலைவர் பதவியின் ஊடாக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் நான் இருந்தேன்.
ஆனால், கட்சி மற்றும் கூட்டணி தலைவர்கள் கேட்டுக் கொண்டதற்கு அமைய, எந்த நிபந்தனையுமில்லாமல், ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கினேன்.
ஆனால், கட்சி தலைவர் பதவி இல்லாமல் பிரதமர் வேட்பாளர் நியமனத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன். பிரதமர் பதவி எனக்கு முக்கியமல்ல.
கட்சியை பிளவுபடுத்தாமல், முன்னோக்கி செல்வதுதான் எமது இலக்கு என்றார்.
இந்த அறிவிப்பு ரணிலிற்கு இடியாக மாறியுள்ளதாக கொழும்புத் தகவல் தெரிவிக்கின்றன.
Leave a Reply